அனைத்துலக அளவில் பகிரப்படும் நயன்தாராவின் புகைப்படங்கள்

சினிமா

பிரபல பத்திரிகைக்காக நயன்தாரா எடுத்திருக்கும் படங்கள் தற்பொழுது இணையத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றன.  தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகத் திகழும் நடிகை நயன்தாரா, அழகான தோற்றம், அபரிமிதமான திறமை, சரியான உடல்வாகு ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்ட  அரிய பிரபலங்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

முன்னணி நடிகருக்கு நிகராக சம்பளம் வாங்கி வரும் நயன்தாரா, சர்ச்சைகளிலும் பஞ்சமில்லாமல் அவர் பெயர் அடிபட்டு வருகிறது. இருந்தபோதிலும் தொடர்ந்து முன்னணி நடிகையாக இருப்பது அவரது தனிச்சிறப்பு.

இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் விரைவில் நயன்தாரா திருமணம் என்ற செய்தியின் சூடு இன்னும் ஆறாத நிலையில் ‘தி வோக்’ பத்திரிகைக்காக, நயன்தாரா எடுத்துள்ள படங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

நடிகை நயன்தாராவுக்கு ‘டுவிட்டர்’, ‘பேஸ்புக்’, ‘இன்ஸ்டகிராம்’ என எந்தவொரு சமூகவலைத்தளங்களிலும் கணக்கு இல்லாத நிலையிலும் அவரது ரசிகர்கள், ‘தி வோக் இன்ஸ்டகிராம்’ பக்கத்திலேயே, நயன்தாராவின் படங்களுக்கு ஒரு லட்சம் விருப்பங்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவரது படங்களுக்கு தொடர்ந்து ‘லைக்’ போட்டு வருவதால் படங்கள் அனைத்துலக அளவில் பிரபலமாகி வருகின்றன.

நயன்தாரா நடிப்பில் இந்த தீபாவளி பண்டிகைக்கு ‘பிகில்’ படமும், பொங்கல் பண்டிகைக்கு ‘தர்பார்’ படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *