அந்த நேரத்தில் அவர்களை அனுப்பியது கடவுள் தான்: உருகும் பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம்

சினிமா

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணகிரியில் தமக்கு ஏற்பட்ட நெகிழவைக்கும் சம்பவத்தை பிரபல பாடகி வெளிப்படுத்தியது தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

திருவண்ணாமலையில் கிரிவலத்தின் போது தாம் சோர்ந்து தடுமாறியதாகவும், அப்போது தமக்கு உதவ முன்வந்த இளைஞர்கள் தொடர்பிலேயே பாடகி அனுராதா ஸ்ரீராம் தமது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், கிரிவலத்தின் ஒருபகுதியில் தமக்கு உதவ முன்வந்த அந்த இளைஞர்களை அப்போது அனுப்பியது கடவுள் என்றே தாம் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

தாங்க முடியாத வெப்பத்தால் மிகவும் சோர்ந்திருந்தேன். மலை உச்சிக்கு செல்ல இன்னும் அரை மணி நேரம் நடக்க வேண்டும்.

ஆனால் அதற்கு முன்னரே தாம் மயக்கமுற்று விழுந்துவிட வாய்ப்பிருப்பதாக எண்ணியதாகவும் அனுராதா குறிப்பிட்டுள்ளார்.

அப்போது அங்கே வந்த சில இளைஞர்கள், அங்கிருந்த அனைவருக்கும் தண்ணீர் வழங்கியது மட்டுமின்றி, தம்மை கிரிவலம் பூர்த்தி செய்யவும் பெரும் உதவி செய்தனர்.

ஒருவர் கடவுளிடம் முழுமையாக தம்மை ஒப்படைத்தால், தேவையான பொழுது அந்த கடவுளே தம்மை துணைக்கு வருவார் என்பது உண்மை என அப்போது உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *