அந்தரங்க உறவில் நாளுக்கு நாள் இன்பம் அதிகரிக்கணுமா? செய்ய வேண்டியது இந்த 5 விஷயம் தான்…

உடல் ஆரோக்கியம்

திருமணமானவர்கள், திருமணமாகாதவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளைக் முறியடித்து, உங்கள் இல்லற வாழ்க்கையில் இன்பம் காண அருமையான மற்றொரு ஆலோசனையுடன் இந்த கட்டுரை உங்களுக்காக வழங்குகின்றோம்.

​இல்லற இன்பம்…

samayam tamil

திருமணம் ஆன பின்பு இல்லற வாழ்க்கையில் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றால், பாதிக்கப்பட்டது நீங்கள் மட்டுமல்ல. பலரும் இந்த விஷயத்தில் வீக் ஆகவே இருக்கின்றனர். உங்களுக்கு, உங்களைப் போன்ற பிரச்சனையில் உள்ளவர்கள் ஏராளமாக இருக்கின்றார்கள். வெளியிலுள்ள பிரச்சனைகள் பதற்றங்கள் உங்கள் இல்லற வாழ்க்கையைப் பதம் பார்த்து விட்டன என்றால் இது உங்களின் பிரச்சனை மட்டுமல்ல பலருக்கும் இருக்கின்றது. இல்லற வாழ்க்கையில் இன்பத்தை நாடுவதைப் பற்றிய சில ஆலோசனைகளை ஏற்கனவே வழங்கி வருகிறோம் அதில் முக்கியமான ஒன்று.

​பழகிய முகம் இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி

samayam tamil

ஒருவருடன் அதிகமாகப் பழகப் பழக அவருடன் நட்பு வேண்டுமானால், அதிகரித்தே செல்லலாம். ஆனால் ஆர்வம், ஆங்கிலத்தில் எக்சைட்மென்ட் என்று கூறுவார்கள் அது குறைந்து கொண்டே போகும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. உங்கள் இருவருக்கும் இடையே இல்லற வாழ்க்கையில் பெரிதளவு இன்பம் கிடைக்கவில்லை என்றால் உங்கள் திருமண வாழ்க்கைக்கு மிகப்பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்று அர்த்தம். திருமணமாகாமல் பழகிக் கொண்டிருந்தால், உங்கள் உறவிற்கும் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்.

உங்கள் இல்லற வாழ்க்கையைத் தூசிதட்டி புதிதாக்க சில கருத்துக்கள். இல்லறத்தில் இன்பமாக வாழ இன்று முதல் ஒரு வாரத்திற்கு சில ஆலோசனைகளை நாங்கள் வழங்க இருக்கிறோம். இதை நீங்கள் பின்பற்றி உங்கள் இல்லற வாழ்க்கையை தூசிதட்டி புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் இல்லற வாழ்க்கையை புதுப்பிப்பது எப்படி என்பதை பற்றி இதில் நாம் பார்க்கலாம்.

 

​ஆசைகளை அடையுங்கள்

samayam tamil

உங்கள் மனதில் உடலுறவு சம்பந்தப்பட்ட எக்கச்சக்க ஆசைகள் தேங்கிக் கிடக்கும் அதை எப்படிச் செய்வது அல்லது சொல்வது என்று கூச்சம் தழைத்தோங்கி இருக்கும், அதை விட்டுச் செல்லுங்கள்.கூச்சத்தை விட்டு உங்களுக்குத் தேவையான நீங்கள் ஆசைப்பட்டு இருக்கும் உங்கள் மனதில் உள்ளதைச் செய்யத் துணிந்து விடுங்கள். இல்லறத்தில் இருவரும் இன்பம் காண வேண்டுமென்றால் கூச்சம் மிகப்பெரும் தடையாகவே இருக்கும் அதை விட்டு உங்கள் மனதில் நினைத்ததைச் செய்யத் துணியுங்கள்.

 

​எப்படிச் செய்வது

samayam tamil

வித்தியாசமான விஷயங்கள் உங்கள் எண்ணத்தில் ஓடிக்கொண்டிருக்கும் உடலுறவு விஷயங்களில் இதைச் செய்தால் தப்பா ஆகிவிடுமோ, அதைச் செய்தால் அவர்கள் தப்பாக நினைத்து விடுவாளோ, என்று அச்சப்பட்டுக் கொண்டு பல விஷயங்களை நாம் செய்யாமல், பழைய சம்பிரதாயமான இல்லற முறையை மட்டுமே பின்பற்றி அமைதியாக இருந்திருப்போம். ஆனால் நீங்கள் இருவரும் சந்தோசமாக இருக்க சில வித்தியாசமான விஷயங்கள் கண்டிப்பாகத் தேவைப்படுகின்றது.உங்கள் துணையின் மனதில் என்ன இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் செயல்படுங்கள். முதலில் மெல்ல உங்கள் மனதில் இருக்கும் ஆசைகளை அவருடன் பேச ஆரம்பியுங்கள். அவர் அதற்குச் சம்மதம் தெரிவிப்பது போல் தெரிந்தால் நீங்கள் மெல்ல மெல்ல உங்கள் வேலைகளை ஆரம்பம் செய்துவிடலாம்.

 

​பிடிக்குமா? என கேளுங்கள்…

samayam tamil

ஒரு விஷயம் உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் விஷயம் உங்கள் துணைக்கும் பிடிக்குமா, என்பதைக் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் செய்வதை அவர் விரும்பவில்லை என்றால், அதை மேலும் செய்வது உறவின் தொடர்ச்சியில் ஆபத்தில் முடியும்.எனவே முதலில் உங்களுக்குத் தேவையானவற்றை மனதிலேயே ஒரு பட்டியல் போட்டு எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றன்பின் ஒன்றாக அவரிடம் பேசி சம்மதம் வாங்கிக் கொண்டு செய்யுங்கள். அனைத்திற்குமே அவர் வாயைத் திறந்து சம்மதம் சொல்ல வேண்டுமென்றும் எதிர்பார்க்கக்கூடாது. அனைவரும் வாய்மொழியில் சம்மதம் தெரிந்ததை விட உடல் மொழியிலோ கண்களினால் சம்பவங்கள் கிடைக்கும். அதை புரிந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும். இன்றே உங்கள் கூச்சத்தை விட்டுத் தள்ளி நீங்கள் மனதில் செய்ய வேண்டுமென்ற விஷயங்களை இன்று முதல் செய்ய ஆரம்பித்துவிடலாம்.

​இறுதியாக

samayam tamil

நீங்கள் உங்கள் மனதில் பட்டதை இல்லற இன்பத்தை நிஜத்தில் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அதைப் பற்றிச் சிந்தித்துச் செயல்பட ஆரம்பம் செய்கிறீர்கள். அதில் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் உங்கள் துணையின் மனதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் ஒருவேளை அவர் மனதளவில் வேறு பிரச்சினைகள் இருக்கிறாரா அல்லது அவர் சந்தோஷமாக இருக்கிறாரா அவரும் இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை ஊர்ஜிதம் செய்த பின்பு ஆரம்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *