அட இவரு தான் உங்க ஹஸ்பன்டா..? – முதன் முறையாக கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட பாவனா..!

சினிமா

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் பாவனா. இவர் ஒரு கால கட்டத்தில் விஜய் தொலைக்காட்சியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்தவர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சூப்பர் சிங்கர், ஜோடி” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளர். பாவனா சில வருடங்கள் எந்த நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கவில்லை.

அதன் பிறகு பாவனா சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்தார். அடிக்கடி கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், வீடியோகளை பதிவு செய்து மேலும் பிரபலமானார்.

இன்று இவருடைய எட்டாவது திருமண நாள். இதனை முன்னிட்டு தன்னுடைய கணவருடன் எடுத்துக்கொண்ட எட்டு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், அட இவரு தான் உங்க ஹஸ்பன்டா..? என்று ஷாக் ஆகி வருகிறார்கள். காரணம், திருமணம் ஆனதில் இருந்து இவர் தன்னுடைய கணவரின் புகைப்படத்தை பகிர்ந்ததே இல்லை. இது தான் முதல் முறை. இவர் மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *