அடிபட்டவர்களுக்கு ஆதரவாக சென்ற நடிகைக்கு நேர்ந்த கொடுமை! பயத்தில் மூழ்கிய பிரபலம்

சினிமா

ஹிந்து சினிமாவின் பிரபல நடிகை தீபிகா படுகோன். இவர் சக நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சர்ச்சைகளும் சகஜம், எதிர்ப்புகளையும் பொறுமையாக சந்தித்தவர்.

அண்மையில் டெல்லியில் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை அவர் நேரில் சந்தித்து பேசினார்.

இதனால் தாக்குதல் நடத்தியவர்களின் எதிர்ப்புக்கு தீபிகா ஆளானார் . இந்நிலையில் அவர் தற்போது நடித்துள்ள சப்பாக் படத்தின் விளம்பரத்துக்காக இப்படி செய்வதாகவும், அந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் சிலர் விமர்சித்துள்ளார்கள்.

மேலும் அவரின் படத்திற்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டையும் ரத்து செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இதனால் தீபிகா நான் நடித்த பத்மாவத் படத்தையும் இப்படித்தான் எதிர்த்தார்கள், என்னுடைய நடவடிக்கையை விமர்சித்து கருத்து சொல்வார்கள் என்று ஏற்கனவே தெரியும். மனதுக்கு சரி என்று தோன்றுவதை சொல்லிவிட்டேன். நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மாட்டேன். இந்தியாவின் நிலைமையை நினைத்தால் பயமாக இருக்கிறது.

 

Image result for தீபிகா படுகோன் தபு நயன்தாராImage result for தீபிகா படுகோன் தபு நயன்தாரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *