அடடே! காதலிக்கிறதுல இவ்வளவு நன்மைகள் இருக்கா? இத படிங்க உடனே லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க…!

உடல் ஆரோக்கியம்

இந்த பூமியில் பிறந்த அனைவருமே அவர்களின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் நிச்சயம் காதலில் விழத்தான் செய்வார்கள்.

காதல் இரண்டு நபர்களை தங்கள் வாழ்க்கையில் புரிதலை இழக்கச் செய்கிறது என்பது பொதுவான கருத்து என்றாலும், உண்மையில் காதல் என்பது ஒருவரின் வாழ்க்கை, அவர்களின் நடத்தை, உணர்வுகள் மற்றும் அவர்களின் தகுதிகள் என அனைத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

how can love change your life

இந்த மாற்றத்தை வெகுசிலரே நேர்மறையாக பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையை மட்டுமின்றி தங்கள் காதலையும் காப்பாற்றிக் கொள்கிறார்கள். காதல் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும், அந்த மாற்றங்கள் நல்ல மாற்றங்களா அல்லது தவறான மாற்றங்களா என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கும் காதலர்/காதலி அல்லது காதலிக்கும் முறையுமே தீர்மானிக்கும். இந்த பதவில் காதல் உங்கள் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

உங்களை ஒரு சிறந்த நபராக மாற்றுகிறது
உங்களை ஒரு சிறந்த நபராக மாற்றுகிறது
மற்றவரின் பார்வையில் இருந்து உங்களைப் பார்ப்பதற்கு காதல் உங்களுக்கு உதவியாக இருக்கும். . ஆகையால், மற்றவரின் பார்வையில் உங்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை காதல் உங்களுக்கு கற்றுக்கொடுக்கும்.

நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும்

நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும்
காதல் என்பது அடிப்படையில் நீங்கள் எப்படி மற்றவர்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றாற்போல உங்களை மாற்றிக்கொள்கிறீர்கள் என்பதுதான். மற்றவர்களின் நேரத்திற்க்கு எப்படி மதிப்பு கொடுக்க வேண்டுமென்பதை காதல் உங்களுக்கு கற்றுக்கொடுக்கும். உங்களின் நேரம் மற்றும் வேலைகளை போலவே மற்றவர்களின் நேரமும் முக்கியமென உங்களுக்கு உணரவைக்கும்.

உங்கள் சகிப்புத்தன்மையை அதிகரிக்கும்

உங்கள் சகிப்புத்தன்மையை அதிகரிக்கும்
காதலிக்கும் போது மற்றவர்களின் எல்லைகளையும், குறைபாடுகளையும் எவ்வாறு பொறுத்துக்கொள்வது என்பதை நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள். இருவரின் மனம் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது என்பதை உங்களுக்கு புரிய வைக்கும். இந்த உண்மையை புரிந்து கொண்டால் அதன்பின் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து உறவுகளும் அதிக பலன்களை வழங்குவதாக இருக்கும்.

நிஜ அழகை புரிய வைக்கும்

நிஜ அழகை புரிய வைக்கும்
நீங்கள் காதலில் ஆழமாக செல்லும்போது வெளியழகை விட ஒருவரின் இதயம், எண்ணங்கள், செயல்கள் மற்றும் உணர்வுகளில் இருக்கும் அழகை காண கற்றுக்கொள்வீர்கள். வெளி அழகை விட மற்றவர்களிடம் பாராட்டுவதற்கு பல முக்கிய அமசங்கள் இருப்பதை நீங்கள் உணருவீர்கள்.

கெட்ட பழக்கங்களை குறைக்கும்

கெட்ட பழக்கங்களை குறைக்கும்
இந்த பூமியில் உள்ள எல்லாவற்றையும் விட உங்கள் காதலுக்கு நீங்கள் அதிக மதிப்பு கொடுக்க தொடங்கும் போது அது சில மோசமான பழக்கவழக்கங்கள் மற்றும் போதைப்பழக்கங்களில் இருந்து வெளியேற உதவும். உங்களுக்காக இல்லை என்றாலும் உங்கள் காதலை காப்பாற்றிக் கொள்ளவாவது இதை நீங்கள் செய்வீர்கள்.

உண்மை காதலை உணர்த்தும்

உண்மை காதலை உணர்த்தும்
ஒருவரை உண்மையாக காதலிக்கும் போது ஈர்ப்புக்கும், காதலுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை நீங்கள் நன்கு உணருவீர்கள். சிலருக்கு மட்டும்தான் ஈர்ப்பும், காதலும் ஒரே நபரின் மீது ஏற்படும், பலருக்கும் அவ்வாறு அமைவதில்லை. காதல் மட்டுமே உங்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்தும்.

கற்றுக்கொள்ளும் வாய்ப்பு

கற்றுக்கொள்ளும் வாய்ப்பு
காதலிக்கும் போது உங்களின் மூளை பன்மடங்கு வேகமாகவும், சிறப்பாகவும் செயல்படும். நீங்கள் காதலிப்பவரை ஈர்ப்பதற்காக பலவற்றை கற்றுக்கொள்வீர்கள். புதிய மொழிம் புதிய உணவு, சமைக்க, இசை என நீங்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் நீண்டுகொண்டே செல்லும். உங்களுக்காக இல்லை என்றாலும் உங்கள் காதலருக்கு உங்கள் மீது மதிப்பு ஏற்படவாவது இதனை செய்வீர்கள்.

விட்டுக்கொடுப்பதற்கு கற்றுக் கொள்வீர்கள்

விட்டுக்கொடுப்பதற்கு கற்றுக் கொள்வீர்கள்
ஆரோக்கியமாக சண்டை போடுவது எப்படி என்று கற்றுக்கொள்வீர்கள். நியாயமான சண்டைகள் ஒருபோதும் வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாது மாறாக இருவருக்கும் நன்மை பயக்கும் முடிவுகளை நோக்கி உங்களை நகர்த்தும். விட்டுக்கொடுப்பதால் கிடைக்கும் பலனை நீங்கள் காதலில் முழுமையாக அனுபவிப்பீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *